இஸ்லாம் மதம் மீதான வெறுப்பு பேச்சு அதிகரித்துள்ளதாக பெரியபள்ளிவாசல் கண்டனம்!!

6 கார்த்திகை 2023 திங்கள் 13:40 | பார்வைகள் : 10629
இஸ்லாம் மதம் மீது வெறுப்புடன் நடந்துகொள்வது பிரான்சில் அதிகரித்துள்ளதாக பரிஸ் பெரியபள்ளிவாசல் கண்டனம் வெளியிட்டுள்ளது.
பிரான்சில் இஸ்லாம் மதம் மீதான எதிர்ப்புகள், விமர்சனங்கள் போன்றவை அதிகரித்துள்ளன. கருத்துக்கணிப்புகளிலும், ஆய்வுகளிலும் இது தெரியவந்துள்ளது. சமூகவலைத்தளங்களிலும் இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் (D'UNE PAROLE ANTI-MUSULMANS) அதிகரித்துள்ள நிலையில், பரிசின் பெரிய பள்ளிவாசல் (Grande Mosquée de Paris) நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ’இஸ்லாமிய வெறுப்பு பேச்சு’ அதிகரித்துள்ளதை கண்டிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் ஆரம்பமான இந்த ஒரு மாத காலத்தில் இந்த இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1