Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவின் அதிபயங்கர புலாவா ஏவுகணை சோதனை வெற்றி

ரஷ்யாவின் அதிபயங்கர புலாவா ஏவுகணை சோதனை வெற்றி

6 கார்த்திகை 2023 திங்கள் 08:05 | பார்வைகள் : 8508


கண்டம் விட்டு கண்டம் பாயும் புலாவா பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மந்த நிலையை அடைந்து இருந்தாலும், போரானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரஷ்யாவும் தங்களது அதிபயங்கரமான புதிய ஆயுதங்களை தொடர்ந்து சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் ரஷ்யா தன்னுடைய அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும்  புலாவா(Bulava) பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், வெள்ளை கடல் பகுதியில் இருந்து கடல்சார் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான புலாவா “பேரரசர் மூன்றாம் அலெக்சாண்டர்” என்ற மூலோபாய போர் கப்பலில் இருந்து வெற்றிகரமாக ஏவு சோதனை செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.

இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்பது சோதனையின் இறுதிக்கட்டம் என்றும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் விரைவில் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை ரஷ்ய கடற்படையின் சேவையில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்