Toulouse நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!
4 கார்த்திகை 2023 சனி 12:08 | பார்வைகள் : 16922
Zurich நகரில் இருந்து Toulouse-Blagnac (Haute-Garonne) விமான நிலையம் நோக்கி பயணித்த விமானம் ஒன்று Toulouse விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
நேற்று நவம்பர் 3 ஆம் திகதி இரவு 9 மணி அளவில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கும் விதமாக விமானம் தரையிறக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் மருத்துவக்குழுவனர் குறித்த பயணிக்கு சிகிச்சை அளித்தனர்.
முதலுதவி சிகிச்சைகளின் பின்னர் குறித்த 60 வயது பயணி Rangueil பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு விமானம் ஏனைய பயணிகளுடன் புறப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan