Paristamil Navigation Paristamil advert login

உலக கோப்பை தொடர்- இந்திய அணியின் முன்னணி வீரர் விலகல்

உலக கோப்பை தொடர்- இந்திய அணியின் முன்னணி வீரர் விலகல்

4 கார்த்திகை 2023 சனி 09:19 | பார்வைகள் : 8061


உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

இந்நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் மீதமிருக்கும் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணம் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும் உலக கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்