Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தின் மீது பதிவான 139 கி.மீ புயல்!!

ஈஃபிள் கோபுரத்தின் மீது பதிவான 139 கி.மீ புயல்!!

2 கார்த்திகை 2023 வியாழன் 13:46 | பார்வைகள் : 17747


ஈஃபிள் கோபுரத்தின் மீது இன்று காலை 139 கி.மீ வேகத்தில் புயல் பதிவானது. 

நேற்று நள்ளிரவு பிரான்சில் பலத்த புயல் வீசியிருந்தது. சியாரா என பெயரிடப்பட்ட இந்த புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. புயல் எச்சரிக்கை காரணமாக பரிசுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஈஃபிள் கோபுரத்தின் உச்சியின் இன்று காலை 139 கி.மீ வேகத்தில் புயல் பதிவானது.  

முன்னதாக இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் Gérard புயல் பிரான்சில் வீசியிருந்தபோது, 132 கி.மீ வேகத்தில் புயல் பதிவாகியிருந்தது. 

 

2021 ஆம் ஆண்டு ஒக்டோபரின் வீசியிருந்த Aurora புயலின் போது, 153 கி.மீ வேகத்தில் புயல் பதிவாகியிருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்