'விடாமுயற்சி' படக்குழுவினருக்கு மருத்துவ பரிசோதனை...

1 கார்த்திகை 2023 புதன் 14:47 | பார்வைகள் : 5768
அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. மகிழ்திருமேனி இயக்குகிறார். த்ரிஷா, ரெஜினா, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்புக்காக குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர். அவர்களுடன் கலை இயக்குனர் மிலனும் சென்றிருந்தார். அங்கு அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அஜித் படக்குழுவினைரை அழைத்து பேசியுள்ளார். அனைவரும் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும், ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மிலன் மரணம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனி தன் படத்தில் பணியாற்றுகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளாராம். இதை தொடர்ந்து அஜர்பைஜானில் உள்ள குழுவினருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த ஏற்பாடு நடக்கிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1