ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வை காண தயாராகும் 400,000 பேர்!
31 ஐப்பசி 2023 செவ்வாய் 16:51 | பார்வைகள் : 12612
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வைக் காண பரிசில் 400,000 பேர் ஒன்றுகூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பரிசில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளமை அறிந்ததே. அதன் ஆரம்ப நிகழ்வு ஜூலை 26 ஆம் திகதி (2024) ஆரம்பிக்கிறது. அன்றைய நாளில் மொத்தமாக நான்கு இலட்சம் மக்கள் பார்வையிடுவார்கள் எனவும், இவற்றில் ஒரு இலட்சம் பேருக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டு, நுழைவுக்கட்டணம் அறவிடப்படும் எனவும், மீதமாக 300,000 பேர் கட்டணமற்று இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்வுக்கான நுழைவுச் சீட்டுக்கள் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் நாடு முழுவதும் இருந்து 80,0000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அறிய முடிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan