Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேஸ் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம்! இரு நாட்களிற்கு நீடிப்பு

 இஸ்ரேஸ் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம்! இரு நாட்களிற்கு நீடிப்பு

28 கார்த்திகை 2023 செவ்வாய் 10:08 | பார்வைகள் : 8909


இஸ்ரேஸ் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் மேலும் இரு நாட்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்படுள்ளது.

4 நாள் மோதல் இடைநிறுத்தம் முடிவிற்கு வருவதற்கு சற்று முன்னர் கட்டார் இதனை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மூன்று வயது சிறுவன் உட்பட 11 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.

அதேவேளை இதுவரை ஹமாஸ் 50 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது.

ஹமாஸ் பணய கைதிகளை விடுதலை செய்ததற்கு பதிலாக, 30 சிறுவர்கள் மூன்று பெண்கள் உட்பட 33 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்