இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மஞ்சள் மேலங்கி போராட்டக்குழுவினர்!

25 கார்த்திகை 2023 சனி 08:18 | பார்வைகள் : 8859
மஞ்சள் மேலங்கி போராட்டம் பரிசில் ஆரம்பமாகி ஐந்து வருடங்களை கடந்த நிலையில், இன்று நவம்பர் 25, சனிக்கிழமை அவர்கள் மீண்டும் ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பிற்பகல் 2.30 மணி அளவில் Place de la Porte de Bagnolet பகுதியில் ஆரம்பிக்கும் ஆர்ப்பாட்டம் rue Belgrand, avenue Gambetta, boulevards de Ménilmontant, de Belleville, de la Villette, de la Chapelle, Marguerite de Rochechouart வீதிகள் வழியாக Place de Clichy பகுதியை சென்றடைவார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சில ஆயிரம் வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்பார்கள் என அறிய முடிகிறது. மஞ்சள் மேலங்கி போராட்டக்குழுவினருக்கான இணையத்தளம் ஊடாக இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1