சந்திரயான் -3 திட்டம் மூலம் கோடீஸ்வரரான இந்தியர்...
24 கார்த்திகை 2023 வெள்ளி 10:11 | பார்வைகள் : 6170
சந்திராயன் திட்டம் வெற்றி அடைந்ததால் இந்தியாவை உலகமே திரும்பி பார்க்கும் நிலை அடைந்தது மட்டுமல்லாமல், மைசூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கோடீஸ்வரராகியுள்ளார்.
சந்திரயான் -3 திட்டத்திற்காக, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல இந்திய நிறுவனங்கள் அதன் பங்களிப்புகளை வழங்கியுள்ளன. அந்தவகையில், பல இந்திய நிறுவனங்கள் சந்திரயான் -3 திட்டத்திற்காக உதிரி பாகங்களை வழங்கியுள்ளன.
அதன்படி, மேக் இன் இந்தியா திட்டங்களால் கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் ரமேஷ் குன்ஹி கண்ணன் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
மைசூரைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் இஞ்சினியரான ரமேஷ் குன்ஹி கண்ணன் (60) கெய்ன்ஸ் என்ற டெக்னாலஜி இந்தியா என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார்.
இவர், பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உட்பட பல்வேறு வகையான எலெக்ட்ரானிக் உதிரி பாகங்களை வடிவமைப்பதில் திறமையானவர்.
இவருடைய நிறுவனம் தான் சந்திரயான் -3 திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவரை இயக்குவதற்கான மின்னணு உதிரி பாகங்களை தயாரித்தது.
இந்த தகவலானது வெளியில் தெரிய ஆரம்பித்தவுடன், மும்பை பங்குசந்தையில் கெய்ன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உச்சமாகின. அதுமட்டும்மல்லாமல், ஏராளமான ஆர்டர்களையும் பெற்றது.
கடந்த 2022 -ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிப்பட்ட கெய்ன்ஸ் நிறுவனத்தின் பங்குகள், சந்திரயான் 3 வெற்றியை அடுத்து 3 மடங்கு அதிகமானது.
தற்போது, நிறுவனத்தினுடைய 64% பங்குகளை வைத்திருக்கும் ரமேஷ் குன்ஹி கண்ணன் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
1988 -ம் ஆண்டு ரமேஷ் குன்ஹி கண்ணன் தொடங்கிய கெய்ன்ஸ் நிறுவனத்தின் தலைவராக, 10 ஆண்டுகள் கழித்து, இவரது மனைவி சவிதா இணைந்தார்.
ஆனால், தற்போது இஸ்ரோ மூலம் கிடைந்த சந்திரயான் திட்டப்பணிகள் வாயிலாக கெய்ன்ஸ் நிறுவனம் உலக அளவில் பெயர் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாயானது 2020 -ம் நிதியாண்டில், அமெரிக்க டொலர் மதிப்பில் 49 மில்லியனில் இருந்து 3 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், மார்ச் 2024 -ல் முடிவடையும் நிதியாண்டில் அதன் வருவாய் சுமார் 208 மில்லியன் டொலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan