மகிழுந்தின் மீது விழுந்த மர்ம பொருள்! - விடைகாணமுடியாத மர்மம்!!
.jpeg)
21 கார்த்திகை 2023 செவ்வாய் 07:54 | பார்வைகள் : 15888
வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றின் மீது திடீரென மர்ம பொருள் ஒன்று வந்து விழுந்துள்ளது. மகிழுந்தின் கூரையில் பாரிய ஓட்டை ஒன்று விழுந்துள்ளது. (புகைப்படத்தில் பார்க்கலாம்)
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை Strasbourg நகரில் இடம்பெற்றுள்ளது. காலை 7.40 மணி அளவில் அங்குள்ள தீயணைப்பு படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படையினர் அங்கு மகிழுந்து ஒன்றில் இருந்து புகை எழும்புவதை முதலில் பார்த்துள்ளனர். அதன் பின்னரே அதன் கூரைப்பகுதி சேதமடைந்திருப்பதை பார்த்தனர்.
அருகில் கட்டிடங்கள் எதுவும் இல்லாத நிலையில், மகிழுந்தின் மேல் என்ன விழுந்தது என அவர்கள் குழப்பத்துக்குள்ளானர்கள். உடனடியாக காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர்.
பின்னர் தீயணைப்பு படையினர் மகிழுந்துக்குள் பாரிய அளவுடைய ‘பாறை போன்ற ஒன்றை மீட்டு’ காவல்துறையினரிடம் கையளித்தனர். அது நிச்சயமாக பூமியில் கிடைக்கும் பொருள் இல்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
உடனடியாக கதிரியக்க நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தற்போது குறித்த பொருள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை அது அடையாளம் காணப்படவில்லை.
குறித்த பாறை போன்ற பொருளை எவரும் தூக்கி வீசவில்லை எனவும், தூக்கி வீசும் அளவு எடையிலும் அது இல்லை எனவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த மர்ம சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1