சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்- குழந்தை பராமரிப்பாளர் கைது!

18 கார்த்திகை 2023 சனி 15:03 | பார்வைகள் : 15834
பரிசின் புறநகர் பகுதியான Choisy-le-Roiஇல் இருந்து அண்மையில் சிறுவன் ஒருவரது சடலம் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
இந்த சிறுவனின் மரணத்தில் சந்தேக நபராக குழந்தை பராமரிப்பாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை Choisy-le-Roi (Val-de-Marne) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து ஏழு வயது சிறுவனின் சடலத்தை காவல்துறையினர் மீட்டிருந்தனர். தலையில் ப்ளாஸ்டிக் பை சுற்றப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுவன் பலியானதாக விசாரணைகளில் தெரியவந்தது.
இந்நிலையில், குறித்த சிறுவனை பராமரித்து வந்த 29 வயதுடைய நபர் இன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தாமாக வந்து காவல்துறையினரிடம் சரண் அடைந்ததாக அறிய முடிகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1