பிரம்மாண்டமாக நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி!

18 கார்த்திகை 2023 சனி 10:28 | பார்வைகள் : 6363
அகமதாபாத்தில் நாளை நடக்கவிருக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான கலை நிகழ்ச்சியில், பிரித்தானிய பாப் பாடகி துவா லிபா இடம்பெறமாட்டார் என தெரிய வந்துள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது.
இந்தப் போட்டியின்போது பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவுஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லெஸ் ஆகியோர் இறுதிப் போட்டியை கண்டுகளிக்க உள்ளனர்.
அதேபோல் போட்டிக்கு முன்பாகவும், இன்னிங்ஸ் இடைவெளியிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் பிரித்தானிய பாப் பாடகி துவா லிபா பங்குபெறுவார் என்று செய்திகள் உலா வந்தன.
இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் துவா லிபாவின் பெயர் இடம்பெறவில்லை.
பதிலாக பிரீதம் சக்ரபர்தி, ஜோனிதா காந்தி, ஆதித்யா கட்வி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1