கனடாவில் அகதி கோரிக்கை விடுத்திருந்த நபர் திடீர் மரணம்

17 கார்த்திகை 2023 வெள்ளி 08:53 | பார்வைகள் : 8374
கனடாவில் பிரம்டன் பகுதியில் கூடாரம் ஒன்றிற்கு வெளியே தங்கி இருந்த அகதி கோரிக்கையாளர் சுமார் 40 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த மரணமானது ஒரு எச்சரிக்கை சமிக்ஞை என பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கூடுதல் எண்ணிக்கையில் அகதி கோரிக்கையாளர்கள் தஞ்சமடையும் நகர சபைகளுக்கு கூடுதல் உதவி வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த அகதி கோரிக்கையாளரின் மரணம் தமது இதயத்தை கனக்கச் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து செல்லும் அகதி கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் வழங்குவதில் நகரசபைகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பிறவுண் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து செல்லும் அகதி கோரிக்கையாளர் பிரச்சினை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1