வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஐவர் கைது!!

17 கார்த்திகை 2023 வெள்ளி 06:00 | பார்வைகள் : 11544
பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஐவர் Val-de-Marne மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Villeneuve-Saint-Georges (Val-de-Marne) நகரில் உள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை காலை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த அச்சுறுத்தல் விடுத்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 தொடக்கம் 17 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் Villeneuve-Saint-George மற்றும் Sucy-en-Brie நகரங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை பிரான்சில் 996 வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1