Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர்! மனித சடலங்களை நாய்கள் உண்ணும் அவலம்

 இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர்! மனித சடலங்களை நாய்கள் உண்ணும் அவலம்

14 கார்த்திகை 2023 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 7996


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் தீவிரம் அடைந்து வருகின்றது.

இந்த போரில் உயிரிழந்த பலரின் சடலங்கள் இன்னும் குறித்த வைத்தியசாலையில் இருப்பதாக  உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளாந்தம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அல்-ஷிஃபா வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான போரில் காயமடைந்த சுமார் 600 பேர் தற்போது அல்-ஷிஃபா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 

மேலும் பலர் வைத்தியசாலையில் இடமின்றி நடைபாதைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிறிஸ்டியன் லிண்ட்மியர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலையில் உள்ள சடலங்களின் இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள இதுவரை இஸ்ரேல் அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், சடலங்களை நாய்கள் உண்ணும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது

வர்த்தக‌ விளம்பரங்கள்