Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மண்சரிவு! 4 பேர் மாயம்! தொடரும் தேடுதல் நடவடிக்கை

இலங்கையில் மண்சரிவு! 4 பேர் மாயம்! தொடரும் தேடுதல் நடவடிக்கை

13 கார்த்திகை 2023 திங்கள் 03:31 | பார்வைகள் : 7359


பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு பிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சம்பவத்தில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மண்சரிவினால் பகுதியளவில் சேதமடைந்த இரண்டு வீடுகளிலிருந்த ஒன்பது பேர் அருகிலுள்ள தங்குமிடம் ஒன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மண்சரிவில் சிக்கியிருந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்