பரிஸ் : ட்ராமுடன் மோதியதில் ஒருவர் பலி!

12 கார்த்திகை 2023 ஞாயிறு 19:02 | பார்வைகள் : 10895
ட்ராம் தொடருந்துடன் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
50 வயது மதிக்கத்தக்க ஒருவர், Porte Dorée நிலையத்தின் அருகே உள்ள Poniatowski Boulevard பகுதியினை கடக்க முற்பட்டார். ட்ராம் வரும் பாதையில் அவர் நடந்து சென்ற நிலையில், ட்ராம் சாரதி சமிக்ஞை ஒலி எழுப்பியுள்ளார். இருந்தபோதும் அவர் ட்ராம் பாதையை விட்டு வெளியேறவில்லை. இதனால் அவர் ட்ராமுடன் மோதுண்டுள்ளார்.
மாலை 5.45 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உடனடியாக மருத்துவக்குழுவினரை அழைக்க, அவர்கள் விரைந்து சில முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை எனவும், அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1