இலங்கையில் அடுத்த ஆண்டு முதல் பெட்ரோல்-டீசலுக்கு 10% வரி!
12 கார்த்திகை 2023 ஞாயிறு 12:20 | பார்வைகள் : 6072
இலங்கையில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது வற் வரி விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை 10% அதிகரிக்கலாம் என்று சமீபத்தில் நடைபெற்ற அரசு நிதித்துறைக்கான பாராளுமன்றக் குழுவில் விவாதிக்கப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்த அரசாங்க வருமான இலக்குகளை எட்ட முடியாமல் போனதன் காரணமாக அடுத்த வருடம் (2024) முதல் VAT வரியை 18% ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்தது.
எவ்வாறாயினும், மண்ணெண்ணெய்க்கு இந்த வரி அறவிடுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் “கோப்” குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இந்த பிரேரணையை எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு அனுப்புவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan