இலங்கை பேருந்துகளில் கட்டாயமாகும் நடவடிக்கை
11 கார்த்திகை 2023 சனி 13:30 | பார்வைகள் : 7350
இலங்கையில் பயணிகள் பஸ்களில் சிசிடிவி கமராக்களை பொருத்துவதை கட்டாயமாக்க பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
பயணிகள் பஸ்களுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குமாறும் குழுவின் தலைவர் நாலக பண்டார கோட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள், பயணிகள் பஸ்களில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அதன்படி பஸ்களில் சிசிடிவி கமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் உள்ள பெரும்பாலான அதிவேக நெடுஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இலாபம் ஈட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளின் இலாபத்தில் நஷ்டத்தில் இயங்கும் அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் குழு மூலம் தெரிய வந்துள்ளது.
அனைத்து விரைவுச் வீதிகளிலும் QR குறியீட்டைப் பயன்படுத்தி சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான திறமையான முறையைத் தொடங்குமாறு தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan